000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சோழர் குலப் பெண் |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a அர்த்தமண்டப தென்புற பஞ்சரக் கோட்டத்தில் நின்ற நிலையில் உள்ள சோழர் குலப் பெண் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கருவறையின் தென்புற பஞ்சரக் கோட்டத்தில் சோழர் குலப் பெண் ஒருவள் வைஷ்ணவ நிலையில் வலது காலை நன்றாக ஊன்றி, இடது காலை சிறிதே மடக்கி உடலை வளைவோடு அமைத்து நிற்கிறாள். இவள் சோழர் குல அரசியாகலாம். கூந்தலை அள்ளிக் கொண்டை போட்டு, தலைக்கொண்டை சுருள் சுருளாக அமைந்துள்ள குந்தளம் தலைமுடியைக் கொண்டுள்ளாள். தலையின் நேர் வகிட்டில் தொய்யகம் விளங்குகின்றது. நேர்வகிட்டின் இருமருங்கில் சூரியப்பிரபை, சந்திரப் பிரபை எனப்படும் சுட்டிகள் (புல்லகம்) அணி செய்கின்றன. மேற்காதுகளில் செவிப்பூ, மற்றும் துளைக் காதில் கடிப்பு எனப்படும் வட்ட வடிவானதும். தட்டையானதும், இரத்தினங்களால் பதிக்கப் பெற்றதுமான காதணி திகழ்கின்றன. கழுத்தில் கண்டிகை, பவளமாலை, சரப்பளி, தோள்களில் வாகுமாலை, கைகளில் தோள்வளை, கடக வளை (முழங்கையில்), முன் கைகளில் செம்பொற் கைவளை ஆகியன அணி செய்கின்றன. கால்களில் அரியகம் விளங்குகின்றது. பாதங்களில் அரியகம் அழகு செய்கின்றது. இடையில் மேகலை அமைந்து மடிப்புகளுடன் நீண்ட பட்டாடை அணிந்துள்ளார். இடைக்கட்டின் முடிச்சு பின் காட்டப்பட்டுள்ளது. இடது கை ஊரு முத்திரையாக தொடையிலும், இடது கை மலரைப் பிடித்தபடியும் அமைந்துள்ளன. கை விரல்களில் நடு விரல் தவிர மற்ற விரல்களில் வளையங்கள் காட்டப்பட்டுள்ளன. வனத்த இளமை பொங்கும் தனங்களுடன் (மார்பில் கச்சை ஏதும் காட்டப்படவில்லை. அக்கால வழக்கப்படி மேலாடையின்றி உள்ளாள்) கொடியிடையாளாக எழில் மிக்க தோற்றத்துடன் இப்பெண் விளங்குகிறாள். |
653 | : | _ _ |a சோழர் குலப் பெண், சோழர் குல அரசியார், சோழ நாட்டுப் பெண்கள், கும்பகோணம், குடந்தைக் கீழ்க் கோட்டம், தஞ்சாவூர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம், குடந்தைக் கீழ்க்கோட்டம் கோட்டச் சிற்பங்கள் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.95847464 |
915 | : | _ _ |a 79.37757388 |
995 | : | _ _ |a TVA_SCL_000162 |
barcode | : | TVA_SCL_000162 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |